Tuesday 3 April 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு- TET

வினாத்தாள் அமைப்பு:

தாள்:1

மொத்தம் 150 கொள்குறி வகை (Objective type) வினாக்கள்.

வினாத்தாள் அமைப்பு:

1. குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் – 30 வினாக்கள்.

2. தமிழ் – 30 வினாக்கள்

3. ஆங்கிலம் – 30 வினாக்கள்

4. கணிதம் – 30 வினாக்கள்

5. சூழ்நிலையியல் – 30 வினாக்கள்

மொத்தம் – 150 வினாக்கள் மேற்கண்ட அனைத்து பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும்.

இதற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வரையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாக்களின் கடின அளவானது 10-ஆம் வகுப்பு வரை இருக்கும். இந்த தேர்வில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று தேர்விற்கான நேரம் 1 1/2 மணி நேரத்தில் 150 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே. இதில் தேர்ச்சி பெற வேண்டுமெனில் குறைந்த பட்சம் 60 சதவிகிதம் அதாதவது 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

தாள்: 2

மொத்தம் 150 கொள்குறி வகை (Objective type) வினாக்கள்.

வினாத்தாள் அமைப்பு:

1. குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் – 30 வினாக்கள்.

2. தமிழ் (கட்டாயம்) – 30 வினாக்கள்

3. ஆங்கிலம் (கட்டாயம்) – 30 வினாக்கள்

4. அ. கணிதம் மற்றும் அறிவியல் – 60 வினாக்கள் (இளநிலை பட்டம் பெற்றவர்கள்)

ஆ. சமூக அறிவியல் – 60 வினாக்கள்

மற்ற பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் 4 அ அல்லது 4 ஆ ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மொத்தம் – 150 வினாக்கள் மேற்கண்ட அனைத்து பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும்.

இதற்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வரையில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வினாக்களின் கடின அளவானது 12-ஆம் வகுப்பு வரை இருக்கும். இந்த தேர்வில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று தேர்விற்கான நேரம் 1 1/2 மணி நேரத்தில் 150 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே. இதில் தேர்ச்சி பெற வேண்டுமெனில் குறைந்த பட்சம் 60 சதவிகிதம் அதாதவது 90 மதிப்பெண்கள் பெற வேண்டும்




No comments:

Post a Comment