Thursday, 29 March 2012

தமிழக மாவட்டங்கள்அரியலூர்
நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
அரியலூர் வட்டம் சுமார் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததாக புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்
முக்கிய நகரங்கள் 
கங்கை கொண்ட சோழபுரம்
முதலாம் இராஜேந்திர சோழன் இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை  படை எடுத்து  வெற்றி பெற்றதன் நினைவாக  கங்கை கொண்ட சோழபுரம் என்ற இந்நகரை நிர்மாணித்து, இங்கே அழியாத கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான். பிறகு இராஜேந்திர சோழன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். அதன் பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராய்க் கொண்டிருந்தனர். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சராய்ப் பணிபுரிந்த இடம் கங்கை கொண்ட சோழபுரமாகும்.
பெரம்பலூர்
மாவட்டத் தலை நகர் 
ஜெயங்கொண்ட சோழபுரம்
இப்பகுதியில் ஜைனமதம் பரவி இருந்ததிற்கான சான்றுகள் பல உள்ளன.
தொழில் :
டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை 
அரியலூர் சிமெண்டு தொழிற்சாலை

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தை பல்லவர்கள் ஆண்டு வந்ததிற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. குன்றக்குடியிலும் பிள்ளையார் பட்டியிலும் பூங்குன்றத்திலும் காணப்படும் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்கள் இராமநாதபுர மாவட்டத்துடன் பல்லவர்களுக்கிருந்த தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

பல்லவர்களுக்குப் பிறகு சோழர்களின் ஆட்சியின் கீழ் இராமநாதபுர மாவட்டம் இருந்து வந்தது. பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்கள் வசம் இருந்தது. கி.பி. 1331 இல் மதுரையைத் தலைநகராய்க் கொண்டு முஸ்லீம் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1371 இல் மதுரை சுல்தான்களின் ஆட்சி சரியத் தொடங்கி கி.பி. 1393 இல் முற்றிலும் அழிந்தது. அதன் பிறகு நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.

கி.பி. 1605 இல் சேதுபதிகளின் ஆட்சி பொறுப்பில் இராமநாதபுரம் மாவட்டம் இருந்தது. சேதுபதிகளுள் கிழவன் சேதுபதி குறிப்பிடத்தக்கவர். கி.பி. 1674 முதல் கி.பி. 1710 வரை இவர் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில்தான் இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரமாயிற்று.
திருநெல்வேலி,மதுரை மாவட்டங்களிலிருந்து 1901 இல் இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம் 1985 மார்ச் 15 இல் மூன்றாகப் பிரிக்கப்பட்டு சிவகங்கை மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும் உருவாக்கப்பட்டன.
இராமநாதபுரம் நகராட்சி 1959 இல் ஏற்பட்டது. இராமநாதபுரம் வைகை ஆற்றின் முகத்தில் அமைந்த ஊராதலால் இதை 'முகவை' என்று குறிப்பிடுவர்.காஞ்சிபுரம் (Kancheepuram)

   தலைநகரம் :
காஞ்சிபுரம்
பரப்பு :
3,368.90 .கீ.மீ
வரலாறு : 

காஞ்சிபுரம் மாவட்டம் என்று இன்று அழைக்கப்படுவது அண்மை காலம் வரை செங்கல்பட்டு மாவட்டம் என்றே வழங்கிற்று. காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வளமும் தொழில்வளமும் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு காஞ்சிபுரம் நகரம் தலைநகராய் விளங்கி வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான். பின்னர் இம்மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடப் பட்டது. 

சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார். பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது. 1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று. 

1687
இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின. 18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் முகமது அலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார்.

எல்லைகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வடக்கில் திருவள்ளூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் விழுப்புரம் மாவட்டமும், மேற்கில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன.

வழிபாட்டுத்தலங்கள் :


கைலாசநாதர் கோயில் :

இந்த சிவன் கோயிலை 7 ஆம் நூற்றாண்டில் ராயசிம்ம பல்லவன் கட்டினான். பிறகு 8-ஆம் நூற்றாண்டில் கோயிலின் முகப்பு மூன்றாம் மகேந்திர வர்மனால் கட்டப் பட்டது. இது ஆரம்பகால திராவிட கட்டிடக் கலையின் புதுமையும் எளிமையும் பிரதிபலிக்கும் கோயிலாகும். இதன் கட்டிடக்கலை மகாபலிபுரக் கோயில்களை ஒத்திருக்கிறது. பல நடன மாந்தர் நடுவே சிவனும் பார்வதியும் ஆடும் போட்டி நடனச் சிற்பங்கள் காணத் தக்கவை. இக்கோயிலின் எதிரே இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலகம் அமைந்திருக்கிறது.
வைகுந்தப் பெருமாள் கோவில் :

இந்த விஷ்ணு ஆலயம் நல்ல எழிலமைப்பைக் கொண்ட வைணவக் கோயிலாகும். கி.பி.674 இலிருந்து கி.பி. 800 வரையிலுமான காலத்தில் பரமேஸ்வர பல்லவனாலும், இரண்டாம் நந்தி வர்மனாலும் கட்டப்பட்டக் கோயிலாகும் இது. கைலாச நாத கோயில் கட்டியப் பின்னரே இது கட்டி முடிக்கப்பட்டது. பிற்கால கோயில்களில் ஆயிரங்கால் மண்டபம் உருவாக, இக்கோயிலின் சிங்கமுகத் தூண்களது வடிவமைப்பே தூண்டுகோலாய் அமைந்தது.
ஏகாம்பரேஸ்வர் கோவில் :

இது சிவன் கோயிலாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களிலேயே பெரிய கோயிலாகும். 9 ஹெக்டேர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. இதன் கோபுரத்தின் உயரம் 59மீ (192 அடி). பல்லவர்களும், அவர்களை அடுத்து சோழர்களும் இக்கோயிலைக் கட்டி முடித்தனர். இக்கோயிலைச் சுற்றி உயர்ந்துள்ள கல் மதில்சுவரை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் 1509-இல் கட்டினார். கோயிலின் உள்ளே 5 தனித்தனி பிரகாரங்களும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. ஏக அமர நாதர் (மாமரக் கடவுள்) என்பதே ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயராக வழங்குகிறது. இங்குள்ள மாமரத்தின் நான்கு கிளைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாகும். தலவிருட்சமான இந்த மாமரத்தின் வயது 3500 ஆண்டுகள் ஆகும். 
வரதராஜப் பெருமாள் கோயில் :
காஞ்சியில் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்பட்ட வைணவத் திருக்கோயில்களில் மிகச் சிறப்பு கொண்டது இக்கோயில். இது ஏறக்குறைய 23 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் அரசர்களால் கட்டப்பட்டதாகும். ஐந்து பிரகாரங்களும், இருபெரும் கோபுரங்களும் உள்ளன. நாற்பக்கமும் உயர்ந்தெழும்பிய மதிற்சுவர்களும் ஆயிரங்கால் மண்டபமும் இருக்கின்றன. முதற்பிரகாரத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் கலையழகுடன் கண்கவர் அமைப்பைக் கொண்டதாகும். ஒவ்வொருத் துணிலும் தேர்ந்தச் சிற்பிகளின் கைவண்ணம் மிளிர்கிறது. நான்கு மூலைகளிலும் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட சங்கிலிக் கோர்வை தொழில் நுட்பத்துடன் வியத்தகு முறையில் அமைந்துள்ளன. அன்னப்பறவை மற்றும் கிளியுடன் காதற்கடவுளும் அவரின் துணைவியும் காட்சியளிக்கும் சிற்பம் காணத்தக்கது. இம்மண்டபத்தைச் சார்ந்த ஆனந்த தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தின் நடுவே ஒரு நீராழி மண்டபமும் அத்திவரதர் மண்டபமும் அமைந்துள்ளன. 
காமாட்சியம்மன் கோவில் :
பார்வதிக்கு (காமாட்சி) அர்ப்பணிக்கப்பட்ட இச்சிறு கோவில் 14-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. வடிவில் சிறியதென்றாலும் இக்கோவில் இந்தியா முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்தியாவில் சக்தியை வழிபடும் மூன்று இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மற்ற இடங்கள் மதுரையும், வாரணாசியும் ஆகும். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் 9-ஆம் பிறை நாளில் இங்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. 
குமரக்கோட்டம் :
கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார் வழிபட்டு அருள் பெற்ற இடம். காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்தில் எங்கு சென்றாலும் கோயில்கள் உள்ளன. இந்தியாவிலேயே கோயில்கள் நிறைந்த நகரம் இதுவே ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் வெள்ளித் தேர்த் திருவிழாவும், மாவடி சேவை, கருடச் சேவை விழாக்களும் மிகச் சிறப்புடையன. 
அச்சிறுபாக்கம் :
இது சிவன் கோயில். பாண்டிய அரசன் ஒருவன் கங்கையின் மணலை வண்டியில் கொண்டு வந்தபோது, இவ்வூர் அடைந்ததும் வண்டி மேற்கொண்டு செல்ல முடிய வில்லை. அச்சு முறிந்தது. அப்போது அசரீரி கூறிய மொழியைக் கேட்டு, பாண்டியன் இக்கோயில் திருப்பணியைச் செய்து முடித்தான் என்பது வரலாறு. இவ்வாலயத்தில் இரண்டு கருவறைகள் உள்ளன. கிழக்கில் பெரிய கோபுரம், கோபுர வாயிலுக்கு அப்பால் பானுதீர்த்தம், கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் கொடிமரமும் நந்தியும் சற்று வடக்கே தள்ளி அமைந்துள்ளன. கோபுரவாயிலுக்கு நேராக உமையாட்சி நாதர் என்னும் சிவலிங்கமும், மெல்லியலாள் என்னும் அம்மையும் இருக்கின்றனர். இவை பாண்டிய மன்னரால் நிறுவப்பட்டவை. இக்கோயில் சென்னை-விழுப்புரம் இருப்புப்பாதையில் சென்னையிலிருந்து தெற்கே 90கி.மீ. தொலைவில் உள்ளது. 
திருப்போரூர்:
இக்கோயில் சிதம்பர அடிகள் இயற்றிய 'திருப்போரூர் சந்நிதி முறை' என்னும் நூலால் பாரட்டப்படுகிறது. சிதம்பர அடிகளாலும், அவருக்குப் பின் வந்த அடியார்களாலும் வளர்க்கப் பெற்ற கோயில். சென்னைக்குத் தெற்கே 43 கி.மீ. தொலைவில் உள்ளது. 
குன்றத்தூர் :
சேக்கிழாரடிகள் பிறந்த ஊர். அவர் அமைத்த சிவன் கோயிலும் இங்குள்ளது. திருநாகேச்சுவரம் என்ற பெயரோடு திகழும் இவ்வூர் மலைமேல் முருகப் பெருமான் விளங்குகிறார். சென்னைக்குத் தென்மேற்கில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குக் கண்டெடுத்த புதைப்பொருள்களால் இது நாகரிகம் பெற்றிருந்த ஊர் என்பது தெரிகிறது. 
திருமாற்பேறு :
சிவன் கோயில் உள்ள இத்திருவூரில் நொடிப் பொழுது தங்கு வோருக்கும் முக்தி கிடைக்கும். கூப்பிய கரங்களுடன் திருமால் இறைவர் திரு முன்பு காணப்படுகிறார். திருமாற்பேறு இரயில் நிலையம் பள்ளூர் என்னும் ஊரில் இருக்கின்றது. காஞ்சிக்கு வடமேற்கில் 11 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 100 மலர்களால் சிவனை அர்ச்சிக்கத் திருமால் முயலுகையில் ஒரு மலர் குறைந்தபோது, தம் கண்ணையே மலராகப் பிடுங்கி 100வது மலராக்கி அளித்து வழிபட்டாராம். இதைச் சித்திரிக்கும் சிற்பமும் அங்குள்ளது. 
திருவான்மியூர் :
வான்மீக முனிவர் பூசித்த தலம். இலிங்கம் சற்று வடபுறம் சாய்ந்துள்ளது. பசுவானது பால் சொரிந்து அபிடேகம் செய்த பொழுது அதன் காற்குளம்பு பட்ட வடு காணப்படுகிறது. மேலை கோபுர வாயியில் வான்மீகருக்குத் தியாகராசர் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் நடனக் காட்சியளிக்கிறார். அந்த நடனம் கோயிலைச் சுற்றிலும், வீதிகளிலும் நடைபெறுகிறது. வடமேற்கில் வான்மீகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வடக்கே பாம்பன் குமரகுருதாச அடிகள் கற்குகையும் திருமடமும் உள்ளன. இத் திருத்தலம் சென்னை மயிலாப்பூருக்குத் தெற்கில் கடற்கரையில், 5கி.மீ. தொலைவில் உள்ளது. 
திருக்கழுக்குன்றம் :
கழுகுகள் வழிபட்டுப் பேறு பெற்ற காரணத்தால் கழுகுக் குன்றம் எனப் பெயர் பெற்று, பின்னர் கழுக்குன்றம் என்றானது. வடநாட்டினர் இவ்வூரைப் 'பட்சி தீர்த்தம்' என்பர். 'கதலிவனம்' என்ற மற்றொரு பெயரும் இவ்வூருக்குண்டு. இந்நாளிலும், இம்மலைமேல் இரண்டு கழுகுகள் வந்து நண்பகலில் குருக்கள் அளிக்கும் நெய், சக்கரைப் பொங்கலை உண்டு செல்கின்றன. இங்குள்ள குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு ஒன்று பிறக்கிறது. இப்பொழுதும் அப்படி நடைபெறுகின்றது. நெடுங்காலமாக அவ்வாறு பிறந்த சங்குகளையெல்லாம் சேர்த்து கோயிலில் வைத்துள்ளனர். இம்மலையைச் சுற்றி வர 3 கி.மீ. தொலைவுப் பாதை உள்ளது. சிற்பச் சிறப்பு வாய்ந்த மாமல்லபுரம் என்னும் கடற்கரை நகரம் இங்கிருந்து 14 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது. திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. குன்றுகளில் கல்லுடைத்து வெளிநாட்டுக்குக் கல் ஏற்றுமதி செய்கின்றனர். 
திருமாகறல் :
இராசேந்திர சோழ மன்னன் துரத்திய உடும்பு இறைவன் திருமேனியில் காணப் படுகின்றது. உடும்பு தழுவிக் கொண்டிருப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இங்கு திங்கட்கிழமை வழிபாடு சிறப்புடையது. மக்கட்பேறு வேண்டுபவர் இந்நாளில் வந்து வழிபடுவர். காஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. 
திருக்குரங்கணின் முட்டம் :
குரங்கும் அணிலும் காக்கையும் பூசித்த ஊர் என்பதால் இப்பெயர் வந்தது. இக் கோயில் வாயிலின் வடப்பக்கமும் தென்பக்கமும் குரங்கு, அணில், காக்கை இவை வழிபட்ட முறைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. காக்கை மடு என்பது கோயிலைச் சுற்றியுள்ளது. காக்கை, மூக்கால் கீறிய மடுவாதலால் இப்பெயர் பெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்குத் தெற்கில் 10கி.மீ. தொலைவிலும், தூசி என்னும் ஊருக்குத் தென்கிழக்கில் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இளையனார் வேலூர் :
இக்கோயிலில் வேல் கருவறையுள் நிலைநாட்டி வணங்கப்படுகிறது. முருகப்பெருமான் இளமைக் கோலத்துடன் திகழ்கிறார். காஞ்சி புரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. 
திருப்பெரும்புதூர் கோயில் :
இவ்வூரிலுள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் மிகப் பிரசித்தமானது. இதன் மண்டபங்கள் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டவை. இதன் வைணவத்தைப் பரப்பிய இராமனுஜர் கோயில் உள்ளது. இராமனுஜர் பிறந்த இடமும் இதுதான். இக்கோயிலின் சந்நிதிக் கதவுகள் வெள்ளித் தகடுகளால் ஆனவை. மேலும் இங்கு ஸ்ரீ ஆண்டாள், சக்கரவர்த்தித் திருமகன், வேணுகோபாலன், நம்மாழ்வார் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இது சைவர்களும் வைணவர்களும் வழிபடும் தலமாகும். இங்குள்ள சிவன் கோயில் பழமையானது. நந்திவர்ம பல்லவன் அமைத்த சிங்கத் தூணும், அவனது உருவச்சிலையும் இக்கோயில் மண்டபத்தில் உள்ளன. முன்னாள் பிரதமர் ராஜஂவ் காந்தியின் நினைவிடம் இங்குள்ளது. 
மேல்மருவதூர் ஆதிபராசக்தி :
செங்கற்பட்டுக்கும் அச்சிறுவாக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. தவத்திரு பங்காரு அடிகளார் இக்கோயிலை உருவாக்கினார். இவர் பல ஆன்மீக மாநாடுகளை நடத்தியுள்ளார். இக்கோயிலில் குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெண்பக்தர்களும் ஆண் பக்தர்களும் சிவப்பாடை அணிந்து சக்தியை வழிபடுகின்றனர். தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத முறையில் இங்கு வரும் ஒவ்வொருவருமே அர்ச்சராக இருந்து வழிபடலாம். தமிழ்நாட்டின் பலபாகங்களிலிருந்து கால்நடையாகவே இங்கு வந்து சக்தியை வழிபடுகின்றனர். இங்கு ஆடிபூரத்திருவிழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஒரு பொறியியல் கல்லூரி ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தாரால் நடத்தப்படுகிறது. 


முக்கிய ஊர்கள் :
மகாபலிபுரம் :
மாமல்லபுரம் என்ற மகாபலிபுரம் வரலாற்று சிறப்புமிக்க ஊராகும். பல்லவர் காலத்தில் இது முக்கிய வணிகத்துறைமுகமாக விளங்கியது. இங்குள்ள குடைவரைக் கோயில்களையும் சிற்பங்களையும் காண சுற்றுலாப் பயணிகள் விரும்பி வருகின்றனர். பலவித சிற்பக் கலைச் செல்வங்களை இங்குள்ள சிற்பக் கலைஞர்கள் உருவாக்கித் தருகிறார்கள். சிற்பக்கலைப் பயில தனியே ஒரு கல்லூரியும் இங்குள்ளது. இவ்வூர் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தது. மகாபலிபுரம் எனும் பழையத் துறைமுகத்தை 7-ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசன் மகேந்திரவர்மன் உருவாக்கினான். என்றாலும், முதலாம் நரசிம்மவர்ம மாமல்லன் நினைவாக இக்கடற்கரை நகரம் மாமல்லபுரம் என்றழைக்கப்பட்டது. இதுவே இப்போது மருவி மகாபலிபுரம் என்று அழைக்கப்பட்டது. இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலுமிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்போது கரையில் ஒரே ஒரு கற்கோயில்தான் இருக்கிறது. மகாபலிபுரத்தில் பல அபூர்வச் சிற்பங்கள் கலையழகு மிளிரக் காணப்படுகின்றன. 

மகாபலிபுரத்தை காண வருபவர்கள் முதல்முதல் பார்ப்பவை ஒரு பெரும்பாறையும், அதில் வடிக்கப்பட்டுள்ள அமரச் சிற்பங்களுமே இந்தச் சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள். தொண்ணுறு அடி நீளமும் முப்பதடி உயரமும் உள்ள இந்தப் பாறை மதிலில் நூற்றைம்பது சிற்பங்கள் மிக அழகாகச் செதுக்கப் பெற்றிருக்கின்றன. இந்தப்பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கிறது. இது இரண்டு பாகமாகப் பாறையைப் பிரிக்கிறது. வடக்கு பாகத்தில் சிவப்பிரானையும், தவக்கோலத்தில நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும், கீழே சிறு விஷ்ணுகோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிருள்ளவை போலவே தேவர்களும் தேவியரும் சிலையுருவில் பொறிக்கப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 

பஞ்சபாண்டவர் மண்டபம் சிங்கச் சிற்பங்கள் தலைப்பகுதியில் அமைந்த ஆறு தூண்களோடு காட்சியளிக்கிறது. அடுத்து பசுமண்டபம் எனப்படும் கிருஷ்ண மண்டபம். 

வடமேற்கில் த்ரிமூர்த்தி மண்டபம் உள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருக்கும் மூன்று கர்ப்பகிருகங்கள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஓர் எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது.

பாண்டவரதங்கள் எனப்படும் ஐந்து ரதங்கள் காண்போர் கண்ணைக் கவரும். இந்த ஐந்து ரதக் கோயில்களும் ஒரே பாறையில் செதுக்கியவை. 

அர்ஜுனரதம்.பழங்காலத்தில் செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு செய்த கோயில்களின் அமைப்பையொட்டி இரண்டு நிலை மாடத்துடன் செதுக்கப்பெற்றிருக்கிறது.
காஞ்சிபுரம் :
ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்படும் வரலாற்றுச் சிறப்புடைய காஞ்சிபுரம் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இப்போது காஞ்சியில் 126 கோயில்களே எஞ்சியுள்ளன. காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில கோயில்கள் உள்ளன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பகால சோழர்களுக்கும், பிறகு கி.பி. 6லிருந்து 8-ஆம் நூற்றாண்டு வரையிலுமான காலத்தில் பல்லவர்களுக்கும் காஞ்சிபுரம் தலைநகரமாய் விளங்கிற்று. 


பற்பல அழகிய தொல்சிற்பங்களைத் தாங்கிய பழங்கோயில்கள் பல இவ்வூரில் உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் இங்கு அதிகமாய் வருகின்றனர். இங்கு கைலாசநாதர் கோவில், ஏகாம்பரேஸ்வர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில், குமரக்கோட்டம் ஆகியக் கோயில்கள் பிரசித்திப் பெற்றவை. புஷ்பேஸு ஜாதி (பூக்களில் சிறந்தது ஜாதி மல்லிகை), புருஷேஷு விஷ்ணு (ஆண்களில் சிறந்தவன் விஷ்ணு), நாரிகேஷு ரம்பா (பெண்களில் சிறந்தவள் ரம்பை), நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது காஞ்சி) என்று பாணப்பட்டரின் சமஸ்கிருத ஸ்லோகம் கூறுகிறது. இங்கு அமைந்துள்ள சங்கராச்சாரியர் மடத்திற்கும், அண்ணா நினைவிடத்திற்கும் பலர் வருகின்றனர். காஞ்சிபுரம் வாணிபத்தாலும் நெசவினாலும் பெயர் பெற்ற நகரமாகும். 

குறிப்பாக இங்கு பட்டு நெசவு வெகு சிறப்பாகவும் மிகுதியாகவும் நடைபெறுகிறது. பட்டு நெசவாளர்கள் சுமார் 400 வருடங்களுக்கு முன்பே காஞ்சியில் குடியேறி பரம்பரை பரம்பரையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். காஞ்சிபுரம் பட்டுச்சேலை இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றதாகும்.
வேடந்தாங்கல் :

சென்னையிலிருந்து சுமார் 52 மைல் தொலைவில் வேடந்தாங்கல் பறவை சரணாலயம் உள்ளது. இவ்வூரில் உள்ள ஏரியின் இடையிடையே அடம்பு மரங்கள் அடர்ந்த தோப்பு காணப்படுகிறது. 50 ஏக்கர் நிலப்பரப்புடைய இத்தோப்பில் நூற்றுக்கணக்கான மரங்கள் செறிந்துள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலத்தில் நீர் தேங்கியுள்ள இந்த ஏரித் தோப்பிற்கு நமது நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரமாயிரம் விதவிதமான நீர்பறவைகள் வந்து கூடுகின்றன. 
அக்டோபரிலிருந்து மார்ச் வரை, குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும், ஆயிரக்கணக்கான பறவைகள் (30,000க்கும் மேலாக) இங்கு வருகின்றன. காலை நேரமும் மாலையும் பார்க்கத் தகுந்த நேரங்களாகும். இவ்வாறு பறவைகள் இங்கு கூடுவது இருநூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
கரிக்கிலி :
வேடந்தாங்கலுக்கு வடமேற்கு திசையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள கரிக்கிலியில் இருக்கும் இரண்டு ஏரிகளும், 1975 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. இவ்வேரிகளில் கடப்பமரங்கள் நிறைய உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், பல வெளிநாடுகளிலிருந்தும் பறவைகள் இங்கு வருவதால், வேடந்தாங்கலைப் போல் இங்கும் பறவைகள் சரணாலயம் உள்ளது. 
வி.ஜி.பி. தங்கக் கடற்கரை :
மகாபலிபுரம் செல்லும் பாதையில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில உருவாக்கப்பட்டுள்ளது, வி.ஜி.பி. தங்கக்கடற்கரை. இது உல்லாச பயணிகளின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்படுகிறது. இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அமைப்பும் பழமையும், புதுமையும் இணைந்து எழில் கொஞ்சும் விதமாய் அமைந்துள்ளது.
கோவளம் :
மகாபலிபுரத்திற்கும் சென்னைக்கும் இடையே அமைந்துள்ளது கோவளம் கடற்கரை. இந்தக் கடற்கரை மிக சுத்தமாகப் பராமரிக்கப் படுவதால், இது வெளிநாட்டினர் விரும்பி வரும் சுற்றுலாத் தலமாகும். 
வண்டலூர் :
தாம்பரத்திற்கு தெற்கில் உள்ளது இவ்வூர். கலிங்கப் போரில் வென்ற கருணாகரத் தொண்டைமான் பிறந்த ஊர். இங்கு ஒரு வைணவக் கோயில் உள்ளது. இங்கு உயிரியல் பூங்கா மிருக காட்சிசாலை அமைந்துள்ளது
கருங்குழி :
1825 -ஆம் ஆண்டு வரை பழைய செங்கற்பட்டு மாவட்டத்தின தலைநகராய் இவ்வூர் இருந்திருக்கிறது. இங்குள்ள 100க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரிசி தயாராகி பல ஊர்களுக்கும் அரிசி போகிறது. பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இவ்வூரில் கடுமையான போர்கள் நிகழ்ந்துள்ளன. பிரெஞ்சுக் காரர்களால் கட்டப்பட்டக் கோட்டை இங்கு சேதமுற்ற நிலையில் காணப்படுகிறது. பெரிய அகழி ஒன்றும் இக்கோட்டையில் உள்ளது.
சதுரங்கப்பட்டணம் :
சத்ராஸ் என்று பறங்கியரால் அழைக்கப்பட்ட இவ்வூர் பாலாறு கடலுடன் சங்கமமாகும் இடத்தின் அருகே உள்ளது. டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையும் கல்லறையும் இங்குள்ளன. பல பிரிட்டிஷ்- பிரெஞ்சுப் போர்கள் இங்கு நடந்துள்ளன. விரல் அளவே பழம் கொண்ட ஒரு வகை வாழையினம் இங்கு மிகுதியாகப் பயிராகிறது.
தாம்பரம் :
சென்னைக் கடற்கரைக்கும் இவ்வூருக்கும் உள்ள மின்சார ரயில் தொடர்பால் வளர்ச்சி பெற்ற ஊர். வாணிபம் சிறப்பாக நடைபெறுகிறது. புகழ் பெற்ற கிறித்துவக் கல்லூரி, விமானப் படையின் தரைப் பயிற்சி நிலையம், நுரையீரல் மருத்துவமனை ஆகியவை இங்குள்ளன. 
தரமணி :
 தொழுநோய் மருத்துவ நிலையம் உள்ளது. 
பல்லாவரம் :
பல்லவர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய ஊர். பல்லவபுரம் என்றிருந்த பழைமைப் பெயர் பல்லாவரம் என்று ஆயிற்று. மகேந்திரவர்மன் அமைத்த குகைக் கோயில் உள்ளது. தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள் வாழ்ந்த ஊராகும். இதற்கு அண்மையில் மலைச்சாரலில் கல்லுடைக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சுற்றுபுற ஊர்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பல இயங்கி வருகின்றன. உயர் அழுத்த மின்சாரக் கருவிகள் செய்யும் இங்கிலீஷ் எலெக்ட்ரிக் கம்பெனி உள்ளது. பல்லாவரம் மலையில் ராடார் நிலையம் இருக்கிறது.
திருவான்மியூர் :
பழஞ்சிறப்பு வாய்ந்த இவ்வூர் அடையாற்றின் அருகாமையில் உள்ளது. முதல் இராஜேந்திர சோழனின் கல்வெட்டும் காணப்படுகின்றது. சமயக்குரவர்கள் பாடிய ஊர். இசை, நடனம், கற்பிக்க இங்கு கலா ஷேத்திரம் அமைந்திருக்கிறது.
மாதவரம் :
இவ்வூரில் தோல் பதனிடும் நிலையங்களும் பெரிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிவரும் மாதவரம் பால் பண்ணையும் உள்ளன. பால் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் உள்ளது. 
மீனம்பாக்கம் :
இவ்வூரில் வெளிநாட்டுப் பயண விமான தளமும், பின்னி பொறியியல் தொழிற் சாலையும் உள்ளன. சமணக் கல்லூரி இங்குள்ளது. 
திரிசூலம் :
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் போக்குவரத்துப் பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட இரயில் நிலையம் திரிசூலமாகும். இதற்கு அருகில் உள்நாட்டு விமான தளம் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது.
வாலாஜாபாத் :
இவ்வூர் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. நேர்த்தியான கைத்தறித் துணிகளுக்குப் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள இந்து மதப் பாடசாலை புகழ் பெற்றது. 
தென்னேரி :
 தொண்டைமான் இளந்திரையன் என்ற அரசனால் இங்கு வெட்டப்பட்ட ஏரி திரையன் ஏரி என வழங்கியது. இதுவே இப்போது தென்னேரி என மருவியுள்ளது. சோழர் காலத்திய கல்வெட்டுகள் பல இவ்வூரில் காணப்படுகின்றன. 
மதுராந்தகம் :
உத்தம சோழன் என்ற மதுராந்தகச் சோழன் காலத்தில தோன்றிய ஊராதலின் இது இப்பெயரைப் பெற்றது. இங்கு வடமொழிக் கல்லூரியும், வேத பாடசாலையும் உள்ளன. இங்குள்ள ஏரி காத்தப் பெருமாள் கோவில் மிகுந்த புகழ் பெற்றது. இவ்வூர் ஏரி மிகப் பெரியது. மதுராந்தகம் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது. 
செங்கற்பட்டு :
தென்னகத்து இரயில் சந்திப்புகளில் முக்கியமானது செங்கற்பட்டு, இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் மிகப் பழமையானது. இதில் சிந்தையைக் கரும் சிற்பங்கள் பல நிறைந்துள்ளன. இங்கு வைத்தே சோழ, பாண்டிய மன்னர்கள் முடி சூட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள கோட்டை விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பெற்றது. இங்கு சாராய உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று உள்ளது. 
செய்யூர் :
சேயூர் என்பதே செய்யூர் ஆயிற்று. இவ்வூர் ஒரு காலத்தில் இசைக்கும் நடனத்திற்கும் சிறப்புப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. 
குரோம்பேட்டை :
குரோம் லெதர் கம்பெனி இப்பகுதியில் தொடங்கப்பட்ட பிறகே குரோம்பேட்டை என வழங்கலாயிற்று. இங்கு தோல் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கு பல்லவன் பஸ் பணிமனை ஒன்று பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. வரைபடம் தயாரிக்கும் அச்சகம் ஒன்றும் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. அண்ணாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியும் அமைந்துள்ளது.
கல்பாக்கம் :
மத்திய அரசால் சுமார் 148 கோடி ரூபாய் மதிப்பில் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மின்சாரம் பற்றாக்குறையைஇவ்வணுமின்நிலையம் நிறைவு செய்கிறது.
காட்டாங்குளத்தூர் :
மறைமலை நகருக்கு வடக்கில் உள்ள சிற்றுர். இங்கு அரசுத்துறை ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மற்றும் ஆய்வு நிலையங்களும் உள்ளன. 
மாங்காடு :
குன்றத்தூர் அருகிலுள்ள மாங்காடு கிராமத்தில் இருக்கும் மாங்காட்டு அம்மன் ஆலயம் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும்.
நாகல்கேணி :
பம்மல் கிராமத்திற்கு அருகிலுள்ள இவ்வூரில் தோல் பதனிடும் தொழிலகங்கள் பல உள்ளன. இங்குப் பதனிடப்படும் தோல்கள் இந்தியாவில் பஞ்சாபுக்கும், மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
படாளம் :
இவ்வூரில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நடைபெறுகிறது.
கவுல்பஜார் :
இங்கு தாதா பார்மசூடிகல்ஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பலவிதப் பூக்கள் உள்ள தோட்டங்கள் ஏராளம்.. 
இருங்காட்டுக்கோட்டை :
இங்கு ஆண்டுதோறும் கார் பந்தயம் நடைபெறுகின்றது. 
புள்ளலூர் :
முதலாம் மகேந்திரவர்மன், புலிகேசி என்ற சாளுக்கிய மன்னனைத் தோற்கடித்த இடம். ஹைதர் அலி-திப்புசுல்தான் படைகள் கி.பி. 1780 இல் பெய்லி என்ற ஆங்கிலப் படைத்தளபதியை வெற்றி கொண்ட ஊர். கி.பி. 1781 இல் மீண்டும் ஹைதர் அலிக்கும் சர் அயர் கூட் என்ற ஆங்கில படைத்தளபதிக்கும் போர் நிகழ்ந்த இடம். 
சூணாம்பேடு :
உப்பளத் தொழில் இங்கு பெரிய அளவில் நடைபெறுகிறது.
தொழில் :

சென்னை மாநகரம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. இரயில், பஸ், லாரி, விமான, கப்பல் போக்குவரத்து வசதிகள் நிறைந்தது. தொழில்சாலைகளுக்கு தேவையான இடவசதி, தண்ணீர் வசதி, மனித வளம் இம்மாவட்டத்தின் வடபால் மிகுதியால் கிடைக்கிறது. 
பெருங்களத்தூர் மோட்டார் தொழிற்சாலை :
 இங்கிலாந்திலுள்ள ஸ்டாண்டர்டு மோட்டார் கம்பெனியின் கிளை அலுவலகமாக இத்தொழிற்சாலை முன்பு இயங்கி வந்தது. முதலில் குரோம்பேட்டையில் ஆரம்பித்த போது ஸ்டாண்டர்டு வான் கார்டு, பெர்சென் இயந்திரக் கலப்பைகளை இக்கம்பெனி தயாரித்தது. அடுத்த ஆண்டே இத்தொழிற்சாலைப் பெருங்களத்தூரில் நிறுவப்பட்டது.
இங்கிலிஷ் எலெக்ட்ரிக் கம்பெனி :
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 1959 இல் உற்பத்தி தொடங்கப்பட்டது. பியூஸ் வகைகள், மின் கம்பிகள், கீயர் பெட்டிகள் ஆகியன இங்கு தயாராகும் சிறப்பான பொருட்கள். இவை இந்தியாவெங்கும் அனுப்பப்படுகின்றன. அந்நிய நாடுகளுக்கும் மிகுதியாக ஏற்றுமதியாகின்றன. 
படாளம் சர்க்கரை ஆலை :
1958 இல் படாளம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சக்கரை ஆலை, மதுராந்தகம்கூட்டுறவு சர்க்கரை ஆலை என்னும் பெயரால் இயங்கி வருகிறது.
சதர்ன் டயர் மானியூபாக்சரிங் (பி) லிமிடெட் :
வண்டலூரில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கூப்பர் டயர் கம்பெனியின் தொழில் நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொழிற்சாலை மோட்டார்கார்கள், டிரக்குகள், ஸ்கூட்டர்கள் போன்ற வாகனங்களுக்குத் தேவையான டயர்களையும் டியூப்களையும் தயாரிக்கின்றது. 
திருப்பெரும்புதூர் தொழிற்பூங்கா :
திருப்பெரும்புதூர் அருகில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) தொழிற்பூங்கா அமைந்துள்ளது.

இங்கு அமைந்துள்ள முக்கிய தொழிற்சாலைகள் :


1)
ஹூண்டாய் மோட்டார் இந்தியா

2)
மாட்சு ஹூடா எலெக்ட்ரிக் 

3)
லுமாக்ஸ் சாம்லிப் 

4)
மர்குய்ப் இந்தியா

5)
ஜே.பி.எம். சுங்க்வூ

6)
லுஜூய் ஆட்டோ-மோடிவ்

7)
ஜே.கே.எம். டேயரிம் ஆட்டோ மோடிவ்

8)
டைனமேடிக் டெக்னாலஜஂஸ்

9)
ஷர்டா மோட்டார் 

10)
மண்டோ பிரேக் சிஸ்டம்ஸ்

11)
வேளியோ பிரிக்ஷன் மெட்டீரியல்ஸ்

12)
போஸ்-ஹூண்டாய் ஸ்டீல் மேனுபாக்சரிங்

13)
பி.எச்.சி. மேனுபாக்சரிங்

14)
டாங்கீ விஷன்

15)
யம்கோ ஜே.கே.எம். என்ஜியனீயரிங்

16)
செயிண்ட்-கோபைன் மிதவைக் கண்ணாடித் தொழிற்சாலை
செயிண்ட் கோபைன் மிதவைக் கண்ணாடித் தொழிற்சாலை 22.1.98 அன்று தொடங்கப்பட்டது.

கடலூர் (Cuddalore)
   

தலைநகரம் :
கடலூர்
பரப்பு :
3,564 .கி.மீ
மக்கள் தொகை :
2,280,530
எழுத்தறிவு :
1,443,851 (71.85 %)
ஆண்கள் :
1,148,729
பெண்கள் :
1,131,801
மக்கள் நெருக்கம் :
1 .கீ.மீ - க்கு 626

எல்லைகள் : 

தெற்கே திருச்சிராபள்ளி மாவட்டமும்; தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

சட்டசபை தொகுதிகள் : 

9.
கடலூர், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்குடி(தனி) குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மங்களூர்(தனி).

பாராளுமன்ற தொகுதிகள் : 

2
கடலூர், பண்ருட்டி


ஆறுகள்: கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு.

ஏரிகள் : 

வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது. வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது.
பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது.
திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை
கனிவளம் : 

இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி. களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன.

பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது. மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன.

வேளாண்மை : 

 மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன.

ஆலைகள் :

சர்க்கரை ஆலைகள்  கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன.
கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன.

மின்சார தொழில் : 

வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.


தொழிற்சாலைகள்: 

1.
மாருதி லேபோரட்டரிஸ் பிரைவேட் லிட்
2.
தமிழ்நாடு அலுமினியம் புளோரைடு லிட்
3.
பைபர் பைப் லிட்
4.
இன்டாக் புராடெக்ட்ஸ் லிட்
5.
ஆஸ்வாலிக் கெமிக்கல்ஸ் லிட்
6.
ஸ்வஸ்திக் சிராமிக்ஸ் ஒர்க்ஸ்
7.
கேலாக் பிரைவேட் லிட்
8.
கிளின் பீல்ட் இந்தியா லிட்
9.
பென்டாசியா கெமிக்ல்ஸ் லிட்
10.
மாருதி சிந்தடிக் பார்மசூடிகல்ஸ்
11.
மலாங் என்டர் பிரைசஸ் லிட்
12.
கொரமண்டல் பாலிபேக்ஸ் (பி) லிட்
13.
யுனெடெட் அப்ரசிவ்ஸ் (பி) லிட்.


சிதம்பரம் : 

சிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் ஆடவல்லான் (நடராசர்) இருக்கும் சிற்றம்பலம், அதனை அடுத்து எதிரிலுள்ள பொன்னம்பலம், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி கற்சிலையுள்ள நடனசபை, பேரம்பலம், ஆயிரங்கால் மண்டபம் என ஐந்து சபைகள் உள்ளன. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது. இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம். இப்படி வேறு எவ்வூரிலும் காண இயலாது. கோயில் என்றாலே அது சிதம்பரம் என்பது வழக்கம்.

திருப்பாதிரிப் புலியூர் : 

இறைவன் : தோன்றாத்துணைநாதர், அம்மை : தோகையம்பிகை. கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளதுஅப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, "சொற்றுணை வேதியன்" என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது.
திருவயிந்திரபுரம் : 

வைணவத் தலம். பெருமாள்: தேவ நாதர், தாயார்: வைகுந்த நாயகி. திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர்.

திருநாரையூர் : 
மூவர் தேவாரங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பிறந்து ஊர்.
திருநாவலூர் : 

 சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தது ஊர்.

பிச்சாவரம் : 

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலா இடமாகும். கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது.

கெடிலத்தின் கழிமுகம் : 

கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது.


செயிண்ட் டேவிட் கோட்டை : 

கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 1712-ஆம் ஆண்டு ராஜாதேசிங்கின் தந்தை சாரூப்சிங் இக்கோட்டையை தாக்கினார். 1745-50 வரை பிரஞ்சுக்காரர்கள் 4 முறை தாக்கியிருக்கிறார்கள்.


அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : 

1920-
ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது. 1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாகஉயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். -கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர் தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.

துறைமுகம் : 

கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும். இத்துறை முகம் பழமையானது. அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி.
பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம். முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன. முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது.


நெய்வேலி : 

1870-ஆம் ஆண்டிலேயே நெய்வேலியில் நிலக்கரி இருப்பது ஆங்கிலேயர்கள் கண்டறிந்தனர். 1943-44 ஆண்டுகளில் இங்கு 100 சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ 250 கோடி டன்கள் நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டது. நிலக்கரியை எடுக்கும் பணி 1961- ஆகஸ்ட் 24ம் நாள் துவங்கியது.

பண்ணுருட்டி : 

பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.

நெல்லிக்குப்பம் : 

இங்கு ..டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம்.

வடலூர் : 

இராமலிங்கசுவாமிகள் அவதரித்த இடம். சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் இராமலிங்க அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்
.

No comments:

Post a Comment