Thursday 29 March 2012

புராஜெக்ட் டைகர்


 புலிகளை பாதுகாக்க   இந்திய அரசால் 1972 ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமே புராஜெக்ட் டைகர். இந்திய வனவிலங்குகள் வாரியம் (IBW )  இத் திட்டத்தினை வடிவமைத்தது. புலிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதும், அவைகளின் பாரம்பரிய இயற்கை வாழ்விடங்களை பாதுகாத்து இந்திய மக்களின் கல்வி மற்றும் நல்வாழ்விற்காக அர்பணித்தலுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உலக இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பின் (IUCN ) பொதுக்குழு கூட்டம் 1969 ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது . அதற்கான நடவடிக்கையாக,  இந்திய வனவிலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970 ல்  வனவிலங்கு வேட்டையாடல் தடை செய்யப்பட்டது.  1972 ல் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் இயற்றப்பட்டது. புலிகள்  பாதுகாப்புப் படையும் உருவாக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் இருந்த புலிகளினத்தை பாதுகாக்க  1 ஏப்ரல் 1973 அன்று உத்தராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் நமது பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரால் ப்ராஜெக்ட் டைகர் என்னும் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது

மத்திய அரசு 1972 (NTCA )ஆம் ஆண்டின் தேசிய வவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் என சட்ட பூர்வமாக்கியது.

No comments:

Post a Comment